தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023!

You are currently viewing தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023!

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளத்தில்  ,தமிழீழத் தேசிய மாவீரர் நாள்  – 2023 எழுச்சியுடன் அனுசரிக்கப்படுகிறது

மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்களுக்கு  முல்லைத்தீவு வன்னிவிளாங்குளத்தில்  நினைவேந்தி  அனுஸ்டிக்கப்பட்டது

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 1
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 2
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 3
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 4

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, ஒவ்வொரு கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

தமிழர் தாயக பகுதிகளிலும், புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் வாழும் சர்வதேச நாடுகளிலும் இன்று (27) மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், யாழ்ப்பாணம் – சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள் இன்னுயிர் ஈந்த தமது உறவுளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கண்ணீர் மல்க, மலர் தூவி, சுடரேற்றி உணர்வு பூர்வமாக உயிரிழந்த வீரர்களுக்கு தமது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 5
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 6
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 7
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 8
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 9
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 10
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 11
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 12
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 13
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 14

யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பிரதான ஈகைச் சுடரினை கடற்கரும்புலி மாவீரர் தமிழினியின் தந்தையார் முத்துலிங்கம் சிவப்பிரகாசம் ஏற்றிவைத்தாா்.

அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் , சகோதரர்கள், உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த ஏனையவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 15
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 16

வீரம் புதைந்துள்ள முள்ளியவாய்க்கால் நிலத்தில்   அமைந்துள்ள  துயிலுமில்லத்தில்  தமிழீழத் தேசிய  மாவீரர் நாள் 2023  நினைவேந்தப்பட்டது

சிங்கள படையினரது   கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 17
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 18
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 19

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (27) உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மூன்று மாவீரர்களின் தயார் ஒருவர் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார்.

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 20
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 21
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 22
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 23
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 24
மட்டகளப்பு  தரவையில் மாவீரர் துயிலுமில்லத்தினுள் நுழைந்த சிங்கள பொலீசார் வணக்க நிகழ்வை குழப்பிய காட்டுமிராண்டி தனமான முறையில் நடந்துகொண்டனர்

போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எந்த தடையும் இல்லை என்று  நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்ட நிலையிலும்    தமிழ் மக்களை அச்சுறுத்த  சிங்கள  பேரினவாத அரசு இது போன்ற  நடவடிக்கைகளில்  செய்து வருகிறது .
இந்த அடக்குமுறையை உடைத்து  தரவையில்  தமிழீழத்  தேசிய மாவீரர்  நாள் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது​

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 25

தாயகத்தின் உரிமைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று (27) தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் திருகோணமலையிலிருந்து வருகை தந்தவர்களை பொலிஸார் சம்பூர் ஆலங்குளத்திலுள்ள துயிலும் இல்லத்திற்கு செல்ல விடாமல் தடுத்த போதிலும் கட்டை பறிச்சான் பாலத்திற்கு அருகில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 26

கோடாலிக்கல்லில் எழுச்சியுடன் நினைவேந்தப்பட்ட தமிழீழ தேசிய மாவீரர்நாள்

breaking

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 27
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 28
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 29
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 30
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 31
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 32

வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்தினநிகழ்வு இன்று இடம்பெற்றது.இதன்போது பிரதானஈகைச்சுடரினைமாவீரர்களான உமாசங்கர் மற்றும் கயலட்சுமி ஆகியோரின் தாயாரனவள்ளிப்பிள்ளையினால் ஏற்றி வைக்கப்பட்டது.

ஈச்சங்குளம் மாவீரர்துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளநிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது ஆயிரணக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலியினை

செலுத்தியிருந்தனர்.

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 33

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 34
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 35
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 36
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 37
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 38

மண்ணின், வருங்கால சந்ததியின், தாய்த்தமிழின் இருப்புக்காய் தமது இன்னுயிர்களை உவந்தளித்து  ,தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்களை  ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27   ஆம் திகதி  விடுதலை உணர்வோடு  தமிழினம் வணங்குகின்றது.​

இந்நிலையில் வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர்  லெப் .சங்கர் அவர்களின் நினைவாலயம் முன்பாக மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது.

மாவீரர்களின் உறவுகள் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி   நினைவேந்தல்  செலுத்தினர்.

breaking

ஆலங்குளம் துயிலுமில்லத்தில்  ,தமிழீழத் தேசிய மாவீரர் நாள்  – 2023 எழுச்சியுடன் அனுசரிக்கப்படுகிறது

மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்களுக்கு  ஆலங்குளம் துயிலுமில்லத்தில்  நினைவேந்தி  அனுஸ்டிக்கப்பட்டது

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 39
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 40
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 41
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 42
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 43

அலம்பில் துயிலுமில்லத்தில்  சிங்கள பேரினவாத  அரசினால் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல்   (27) உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது

இந்தநிலையில், அலம்பில்  மாவீரர் துயிலும் இல்லத்தில்  சிங்கள  பொலீசார்  மாவீரர் நாள் அலங்காரங்களை கிழித்து எறிந்து அராஜகம்.

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 44
தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 45

வல்வை ரேவடிக்கடற்கரையில் கப்டன் பண்டிதர் அவர்களின் தாயாரினால் சுடர் ஏற்றப்பட்டது. ,தமிழீழத் தேசிய மாவீரர் நாள்  –

2023 எழுச்சியுடன் அனுசரிக்கப்படுகிறது

மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்களுக்கு  வல்வை ரேவடிக்கடற்கரையில் கப்டன் பண்டிதர் அவர்களின் தாயாரினால் சுடர் ஏற்றப்பட்டது.

 

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 46

முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால்

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தந்தையான தனபாலசிங்கம் ஏற்றி வைக்க ஏனைய உறவுகளுக்கு அவர்களது உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

 

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 47

 

 

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 48

முல்லைத்தீவு கடற்கரை

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்கரையில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடரை கடற்கரும்புலி மேஜர் நிதர்சன் அவர்களின் தாயார் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து துயிலுமில்ல பாடலான தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தன பேழைகளே எனும் பாடல் ஒலிபரப்பாகியது. இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டிருந்தார்கள்.

 

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 49

 

 

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 50

 

 

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 51

 

 

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 52

 

 

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 53

கொடிகாமம்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டன. அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடரை மாவீரர்களான கப்டன் ரசியன், மேஜர் ரெஸ்ரார்,மேஜர் வண்ணன் ஆகியோரின் தாயாரும் மற்றும் மாவீரர் குமரர் மற்றும் சந்திரன் ஆகியோரின் சகோதரியும் ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் பொதுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.

நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்,சகோதரர்கள்,உறவுகள்,சமூக ஆர்வலர்கள்,அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

 

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 54

 

 

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 55

 

 

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 56

 

 

தாயகமெங்கும் எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்ற மாவீரர்நாள்2023! 57
பகிர்ந்துகொள்ள

Leave a Reply