தாயகம் மற்றும் சிறீலங்கா முழுவதும் 690 வேட்புமனுக்கள் ஏற்பு!

You are currently viewing தாயகம் மற்றும் சிறீலங்கா முழுவதும் 690 வேட்புமனுக்கள் ஏற்பு!

2024 பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் 690 குழுக்கள் போட்டியிடப் போவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அநீதிகள் இடம்பெற்றுள்ளதாக உணர்ந்தால் அந்த குழுக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும் எனவும் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான அரசியல் குழுக்கள் போட்டியிடுவதுடன், அதன் எண்ணிக்கை 64 ஆகும்.

மொனராகலை மற்றும் பொலன்னறுவை தேர்தல் மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான அணிகள் போட்டியிடுவதுடன், அங்கு தலா 15 அணிகள் போட்டியிடுகின்றன.

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

யாழ்ப்பாணம்

எதிர்வரும் சிறீலங்கா பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கையளிக்கபட்ட நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

திருகோணமலை

சிறீலங்கா பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகள், 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன. அவற்றில் 17 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதேவேளை மூன்று கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குக் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் ஒரு கட்சி 6 சுயேச்சைகுளுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 22 கட்சிகள் 27 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 49 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் 392 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

வன்னி

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வன்னி மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சைகுழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 4 குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான சரத்சந்திர தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply