இந்தியாவில், மொட்டை மாடியில் காற்று வாங்கிக்கொண்டிருந்த பெற்றோரிடமிருந்து, நான்கு மாதக் குழந்தையை ஒரு குரங்குக்கூட்டம் பறித்துச் சென்ற பயங்கரம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள Bareilly என்ற இடத்திலுள்ள வீடு ஒன்றின் மொட்டை மாடியில் Nirdesh Upadhyay (25)ம் அவரது மனைவியும் தங்கள் நான்கு மாதக் குழந்தையுடன் காற்று வாங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, திடீரென ஒரு கூட்டம் குரங்குகள் அங்கு வந்துள்ளன. அவை குழந்தையைப் பறிக்க முயல, மனைவியிடமிருந்து குழந்தையை வாங்கிய Nirdesh குழந்தையைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓட முயன்றிருக்கிறார். ஆனால், குரங்குகள் குழந்தையைப் பறித்துக்கொண்டுள்ளன.
அவற்றிடமிருந்து Nirdesh குழந்தையைக் காப்பாற்ற முயன்றபோதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. ஆம், சட்டென அந்தக் குரங்குகளில் ஒன்று குழந்தையை மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளது.
மாடியிலிருந்து வீசி எறியப்பட்ட குழந்தை உடனே உயிரிழந்துவிட்டதாம்.
குரங்குகள் மனிதர்களுக்கு இப்படி தொல்லை கொடுப்பது இது முதல் முறையல்ல, சமீபத்தில், தான்சானியா நாட்டில் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டிக்கொண்டிருந்த Shayima Said என்ற பெண்ணிடமிருந்து அவரது குழந்தையை குரங்குகள் பறித்துச் செல்ல, அவரது கூக்குரலைக் கேட்ட அந்த கிராமத்தினர் குழந்தையை மீட்கச் சென்ற நிலையில், குழந்தை சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.