தாய்வானின் அருகே சீன போர்க் கப்பல்கள் ; பாதுகாப்பிற்கு தீவிர போர் பயிற்சியில் சீனா !

You are currently viewing தாய்வானின் அருகே சீன போர்க் கப்பல்கள் ; பாதுகாப்பிற்கு தீவிர போர் பயிற்சியில் சீனா !

தாய்வானின் இராணுவம் நேற்று (09) அவசரகால பதிலளிப்பு மையத்தை அமைத்து அதன் எச்சரிக்கை நிலையை உயர்த்தியதுடன், போர் தயார் நிலைப் பயிற்சிகளையும் தொடங்கியுள்ளது.

தாய்வான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் சீனா கிட்டத்தட்ட 90 கடற்படை, கடலோர காவல்படை கப்பல்களை வைத்திருப்பதாக தைபே பாதுகாப்பு வட்டாரம் ரொய்ட்டர் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது.

போர்க்கப்பல்களைப் பொறுத்தவரை, வார இறுதியில் அதன் எண்ணிக்கை 08 இல் இருந்து 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாய்வானை தனது சொந்தப் பிரதேசம் என்று கூறிவரும் சீனா, தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தேவின் பசிபிக் பயணத்திற்கு பதிலடியாக மற்றொரு சுற்று பயிற்சியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் வந்துள்ளன. திங்கட்கிழமை முதல் புதன் வரை ஜெஜியாங் மற்றும் புஜியன் மாகாணங்களுக்கு கிழக்கே ஏழு தடைசெய்யப்பட்ட வான்வெளி மண்டலங்களை சீனா அறிவித்துள்ளது.

சர்வதேச விதிகளின்படி, ஏனைய விமானங்கள் கட்டுப்பாட்டாளர்களின் அனுமதியுடன் அவற்றை கடந்து செல்ல முடியும் என்று தாய்வான் கூறியுள்ளது.

இந்த கருத்துக்கான ரொய்ட்டரின் கோரிக்கைக்கு சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, தாய்வானின் இராணுவம் அதன் “போர் தயார்நிலை பயிற்சிகளை” மூலோபாய இடங்களில் செயல்படுத்தியதாகவும், அதன் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படகுகள் சீன இராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply