காதலித்துப்பார்
காதல் அழகானது அலாதியானது
ஆதலால் காதல் செய்!
வாழ்தல் அர்தமானது அமைதியானது என்றால் காதல் செய்!
அதிலும்
தாய் மண்ணை காதலித்துப்பார்
உண்மையான காதல் உன்
உள்ளத்தினில் இழையோடும்!
‘அ’ எழுதிய அன்னை மண்ணிற்காய்
வாழ்வினை அற்பணித்த காதலின் உச்சத்தினை காதலித்துப்பார் காதலின் தூய்மை உன் இதயத்தை சிறையெடுக்கும்!
அடிமைப்பட்டுக்கிடக்கும்
மண்ணிற்காய்
அடி முடி தெரியாது
இடிதாங்கிய இதயங்களின் ஆன்மாக்களை ஆய்வுசெய்துபார்
சாயகான் நூர்யகான் காதலை விட
அதி உன்னதமான காதலின் தாஜ்மகால்கள் அங்கே கட்டப்பட்டிருக்கும்!
இனத்தின் விடியலுக்காக
இறுதிவரை
இம்மியளவும்
இலக்கில் விலகாது
இருதயம் நொருங்கும்போதும்
இணைபிரியாது
மண்ணோடு மண்ணாக
காற்றோடு காற்றாக
புனலோடு புனலாக
அனலிடை பாய்ந்தாரே
அவர்களின் தியாகத்தை
காதலித்துப்பார்
காதலின் ஆழம் புரியும்!
தலை வணங்கா
தலைவனாய்
தமிழரின்
தார்மீக உரிமைக்காய்
ஓர்மமாய்
உயர்ந்தாரே
அவர் காட்டிய
வழியினை காதலித்துப்பார்!
அவர்கள்
ஈட்டிய ஈகத்தில்
ஈற்றினில் தமிழீழம்
பிறக்கும்!
தூயவன்