திபெத் நிலநடுக்கத்தில் 35 பேர் உயிரிழப்பு!

You are currently viewing திபெத் நிலநடுக்கத்தில் 35 பேர் உயிரிழப்பு!

நேபாள திபெத்தை எல்லையில் உள்ள பகுதிகளை உலுக்கியுள்ள கடும் பூகம்பத்தினால் 35க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாளம் திபெத் எல்லையில் மையம்கொண்டிருந்த இந்த பூகம்பத்தினால் (6.8) பல கட்டிடங்கள் முற்றாக தரைமட்டமாகியுள்ளதாகவும் நேபாள சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

திபெத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரான சிகட்சேயில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என சீன அமெரிக்க கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன.

சிகட்சோவை சுற்றியுள்ள டிங்கிரி கவுண்டியில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன, மூன்று நகரங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply