திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் காலமானார்!

You are currently viewing திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் காலமானார்!

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த 24-ந்திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது உடல்நிலை குறித்து டாக்டர்கள் மு.க.ஸ்டாலினிடம் விளக்கி கூறினார்கள்.

செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், அவர் கண் திறக்கவில்லை என்றும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் க அன்பழகனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அவர் காலமானார்.

பகிர்ந்துகொள்ள