தியாகத்தீ முதலாம்நாள்

You are currently viewing தியாகத்தீ முதலாம்நாள்

 

மாமன்னன் சங்கிலியன் ஆண்ட நல்லூர் மண்ணில்
முப்பாட்டன்
முருகனின்
சன்னிதானத்தில்
ஈழவிடுதலைக்காக
மெழுகுவர்த்தியொன்று
தன்னை பற்றவைத்தது!

முப்படைகட்டிய
தாய்ப்பறவையின்
ஆணை கிட்டி
தியாகத்தின்
அரியணையில்
உரிமைக்காய்
ஒரு குயில்
நீராகாரமின்றி
கூவத்தொடங்கியது!

மண்ணைச்சூறையாடுவதை நிறுத்து!
அரசியல்கைதிகளை விடுதலைசெய்!
புனர்வாழ்வு பூதத்தை தாயகத்திலிருந்து அகற்று!
தமிழ் மண்ணில்
சிங்கள காவல்த்துறை நிலையங்கள்
இராணுவ முகாங்களை மூடு!
அமைதி முகத்தோடு
ஆக்கிரமித்து
நிற்கும்
இராணுவத்தின்
ஊர்காவல்ப்படைக்கு
வழங்கப்பட்ட
ஆயுதத்தை
மீளப்பெறு!
எனும் கோரிக்கையோடு
பார்த்தீபன்
இனத்தின்
விடுதலைக்காக
உயிரோடு
பாடையிலே
தயாரானான்!

உரிமைக்குரல்கள்
செந்தமிழால்
மாலைகட்டி
வாழ்த்தியனுப்ப
ஒரு தாயின்
ஆசியுடன்
அண்ணன்
திலீபன்
அரங்கிலே
காந்தியதேசத்தின்
கோரமுகத்தை
அவனிக்கு
அம்பலப்படுத்த
அடிவயிற்றிலே
பசித்தீயைப்
பற்றவைத்தான்!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply