தியாகத்தீ-மூன்றாம்நாள்!

You are currently viewing தியாகத்தீ-மூன்றாம்நாள்!

நாற்பத்தியேழு மணத்தியாலங்கள்
நீராகரமின்றி
மூன்றாவது
நாளாகவும்
உறுதியோடும்
அறுதியோடும்
உண்ணமறுத்து
உரிமைக்கான
தியாகப்பயணம்
உயிரில் தீயேற்றி
எரிகிறது!

விழிகள்
குழிவிழுந்து
உதடுகள்
வெடித்துச்சிதறி
சிறுநீர்கழிக்க
முடியாநிலையில்
திலீபன் திணறிய
கணங்களை
அருகிருந்தவர்
விபரிக்கையில்
இன்றும்
நெஞ்சுக்குழியை
அழுத்திப்பிடிக்கிறது
துயரத்தின்
கனதி!

இனத்திற்காக
அளப்பரிய
தியாகத்தினை
மனவுறுதியுடன்
முன்னெடுக்க
அண்ணன்
பிள்ளைகளால்
மட்டுமே முடியும்
என்பதை நினைத்து
பெருமை கொள்வதா?
நன்றிமறந்த
தமிழருக்காய்
உயிரை உருக்கிய
பார்த்தீபனை
நினைத்து
வருந்திக்கொள்வதா?
அல்லது
வயிற்றிலே
வலியை சுமந்தும்
மழையிலே
நனைந்த
மக்களை
விலகிச்செல்லுமாறு
பணித்த
திலீபனின்
பாசத்தில்
திளைப்பதா?

ஒரு
கொடுமையான காலத்தில்
எம்மை தவிக்கவிட்டு
எல்லோரும்
போய்விட்டார்களே?
எனும் ஏக்கத்தில்
காலமூச்சில்
கரைகிறது
காலம்
அதையும் தாண்டி
நன்றி மறப்பது
நன்றன்று என்ற
சிந்தனையில்
விரைகிறது
கால்கள்…

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply