எழும்ப முடியாது
போர்வைக்குள்
புதைந்துபோனான்!
மெல்ல மெல்ல
கொல்லும்
விசமாய்
நீராகாரமின்றிய
உடல்
பசித்தீயில் கருகி
உயிரை
எரிக்கத் தொடங்கிவிட்டது!
சாரை சாரையாய்
மக்கள் வெள்ளம்
பேரூந்துகளை
நிரப்பியபடி
பார்த்தீபனின்
பக்கத்தில் வந்தனர்!
இனத்திற்காக
மருத்துவப்படிப்பை துறந்து
அறத்திற்காய்
அணைந்து கொண்டிருக்கும்
விளக்காய்
விழிப்படலத்தின் முன்னே
உருகிக்கொண்டிருக்கிறான்
எங்கள்
ஊரேழு மைந்தன்!
இன்றுதான்
இந்திப்படை
அதிகாரி
திலீபனைப்
அருகில்வந்து
பார்த்துவிட்டு
வழமைபோன்று
நடவடிக்கை
எடுப்பதாக
கூறிவிட்டு
அகன்றுவிட்டார்!
ஆனாலும்
ஐந்தாம் நாளும்
திலீபதீபம்
எரிந்துகொண்டே
இருக்கிறது!
உலகிற்கு நீதியை
பறைசாற்றியபடி
கறைபடியா அறப்போர்
தணியாத தாகத்தோடும்
அடங்காப் பசியோடும்
தொடர்கிறது…
✍தூயவன்