தியாகி திலீபன் அவர்களின் 36,வது ஆண்டு நினைவு நாட்களை முன்னிட்டு தாயக மற்றும் புலம் பெயர்ந்தோர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவால் இன்று 24.09.2023) ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திற் உட்பட்ட பாடசாலை மாணவர்களுக் கிடையில் தியாகி திலீபன் அவர்கள் நினைவு கவிதைப் போட்டி நடாத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றோருக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப் பட்டு மதிப்பளிக்கப் பட்டுள்ளது.
முல்லைத்தீவு வள்ளிபுனம் றேடியன் முன்பள்ளி வளாகத்தில் தாயக மற்றும் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இணைப்பாளர் முல்லை ஈசன் தலைமையில் நடைபெற்ற குறித்த போட்டி நிகழ்வில்
முதலாம் இடத்தை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி தரம்-11,மாணவன் பா.அறிவன் பெற்றுக் கொண்டுள்ளார்.
இரண்டாம் இடத்தினை முல்லைத்தீவு வள்ளிபுனம் மகாவித்தியாலயம் தரம்-10,மாணவி பு.பவதாரணி பெற்றுக் கொண்டுள்ளார்.
மூன்றாம் இடத்தினை முல்லைத்தீவு மந்துவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை தரம்-09, மாணவி லோ.ரிபுர்சனா பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன் மேலும் ஐந்து மாணவர்கள் ஆறுதல் பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப் பட்டுள்ளனர்.
முதலாம் இடம் பெற்ற மாணவன் பா.அறிவனால் வாசிக்கப்படும் கவிதை
.