தியாகி திலீபன் நினைவு நாள் நல்லூரில் எழிச்சியுடன் ஆரம்பமானது!

You are currently viewing தியாகி திலீபன் நினைவு நாள் நல்லூரில் எழிச்சியுடன் ஆரம்பமானது!

தியாகி திலீபன் அவர்களின் ( 36 ) வது ஆண்டு நாளின் (முதலாம்) நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள அவரது நினைவுத் தூபி முன்பாக உணர்வு பூர்வமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இன்று காலை – 09-45,மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பமான இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர்களான வண்ணவேல் மற்றும் ஜெகன் ஆகியோரின் சகோதரரும் முன்நாள் போராளியுமான விடுதலை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து – 02, நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இதேவேளை இன்று காலை முதல் தியாகி திலீபன் அவர்கள் நினைவு சுமந்த தாயகஎழுச்சிப் பாடல்கள் நினைவுத் தூபி முன்பாக ஒலிக்க விடப்பட்டுள்ளதோடு மக்கள் பலரும் வருகை தந்து உணர்வு பூர்வமாக வணக்கம் செலுத்தி வருவதையும் காண முடிகிறது.

தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபி வளாகம் அண்மை நாட்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் சீரமைப்புச் செய்யப் பட்டு அழகு படுத்தப்பட்டதுடன் சிவப்பு மஞ்சள் வர்ணக் கொடிகள் கட்டப்பட்டு  நினைவு நாளுக்கான தயார்ப் படுத்தல்கள் மேற்கொள்ளப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தியாகி திலீபன் நினைவு நாள் நல்லூரில் எழிச்சியுடன் ஆரம்பமானது! 1தியாகி திலீபன் நினைவு நாள் நல்லூரில் எழிச்சியுடன் ஆரம்பமானது! 2

தியாகி திலீபன் நினைவு நாள் நல்லூரில் எழிச்சியுடன் ஆரம்பமானது! 3

தியாகி திலீபன் நினைவு நாள் நல்லூரில் எழிச்சியுடன் ஆரம்பமானது! 4

தியாகி திலீபன் நினைவு நாள் நல்லூரில் எழிச்சியுடன் ஆரம்பமானது! 5

தியாகி திலீபன் நினைவு நாள் நல்லூரில் எழிச்சியுடன் ஆரம்பமானது! 6

 

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply