தியாக தீபம் பவனிக்கு தடையில்லை – உறுதியுடன் பயணிப்போம் ! செல்வராஜா கஜேந்திரன்

You are currently viewing தியாக தீபம் பவனிக்கு தடையில்லை – உறுதியுடன் பயணிப்போம் ! செல்வராஜா கஜேந்திரன்

தியாக தீபம் அவர்களின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனியால்  தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில் வலம் வந்த போது சிங்களக் காடையர்களினால் தாக்கப்பட்ட நிலையில் வவுனியாவை வந்தடைந்த குறித்த ஊர்திப் பவனி வவுனியாவில் இடம்பெற்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், இன நல்லுறவு சீர்குலையும் என பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழீழ விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்வதாகவும் காரணம் காட்டி குறித்த ஊர்திப் பவனிக்கு சிங்கள பொலிசார்  தடை கோரிய நிலையில் .

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்யப் போவதாக கூறி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கஜேந்திரன் உட்பட்ட நபர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத  பொலீசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது இந்த வழக்கிலே நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்வதற்கான எந்தவிதமான  அடிப்படை ஆதாரங்களும் இல்லை எங்கள் தரப்பு நியாயங்களை நாங்கள் எடுத்துரைத்திருந்தோம் நீதிமன்றம் தற்சமயம் குறித்த வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா  கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்தாவது

இந்த அரசாங்கமானது தன்னுடைய பயன்படுத்தி ஜனாயக குரல்களை நசுக்குகின்ற செயற்பாடுகளை தொடர்சிய செய்துகொண்டு இருக்கின்றது.  அந்தவகையில் சமுகவலை தளங்களில்  பதிவிடுகின்றவர்களுக்குரிய செயற்பாடுகளை முடக்குகின்ற நோக்கத்தோடு இப்பபொழுது ஒரு புதிய சட்டம் ஆக்கப்பட்டு இருப்பாதாக அறியப்படுகிறது.  குறிப்பாக இந்த அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்திருக்கின்ற ஒரு  நிலையிலே இந்த அரசின்  செயற்பாடுகள் ஊழல் மோசடிகளை இந்த சமுகவலைதலங்கள்  ஊடக தனிநபர்கள் மிக துணிச்சலோடு வெளிப்படுத்தி மக்களை விழிப்படைய செய்கின்ற  செயற்பாடுகள் அதிகரிகின்ற காரணத்தால் மக்களை ஏமாற்றி கொண்டு தொடர்ந்தும் கடந்த காலங்களை போன்று அரசியலின் நிலைக்கமுடியாத ஒரு நிலையியே மக்களின் குரல்வளைகளை நசுக்கி இந்த உண்மைகள் வெளிவருவதை தடுத்து தாங்கள் தங்களுடைய அரசியலை கொண்டு நடத்துவதன் நோக்கில் தான் ரணில் அரசாங்கம் இவ்வாறான சமுகவலை தளங்களை கட்டுப்படுத்துகின்ற செயற்பாடுகளை கொண்டுவருகிறது.

கடந்த காலங்களில் பயங்கரவாத தடுப்பு சட்டங்களின் கீழே பயங்கரவாத கட்டுபடுத்துகின்ற பெயரிலே தமிழ் மக்களின் நியாயமான குரல்களை நசுக்கிகின்ற செயற்பாடுகளைதான் அரசாங்கம் மேற்கொண்டு இருந்தது.  கடந்த காலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்தது. அது ஒரு பயங்கரவாத தடை சட்டத்தின் ஊடாக நடந்தது . ஆனால் இன்று வேறு வேறு சொந்தங்கள் ஊடாக ஓட்டு மொத்தமான தமிழ் மக்களை மட்டும் அல்லாமல் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களுடைய நியமான கருத்துகளை அரசினுடைய சமூகவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை  முடக்குகின்ற நோக்குடன் தான் அரசு இதை செய்ய முற்படுகிறது.   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா  கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply