இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து வட தமிழீழம் , யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 37 ஆண்டு நினைவு நாட்களிலே தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று நடாத்தப்பட்ட ஓவியப்போட்டியின் பதிவுகள்.
கோரிக்கைகள்
1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.









