திருகோணமலையில் இரு பாடசாலை மாணவிகள் மாயம் !

You are currently viewing திருகோணமலையில் இரு பாடசாலை மாணவிகள் மாயம் !

திருகோணமலையில் (Trincomalee ) இரண்டு பாடசாலை மாணவிகள் ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரே பாடசாலையில் கல்வி கற்கும் 15 மற்றம் 17 வயதுடைய இரு நண்பிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை – அபயபுர பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் கடந்த 18ஆம் திகதி காலை வேலைக்குச் செல்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

பின்னர் முச்சக்கரவண்டியில் திருகோணமலை – சிங்கபுர பகுதிக்கு வந்து தனது 15 வயது நண்பியையும் ஏற்றிக்கொண்டு அவரது சகோதரியை முன்பள்ளியில் இறக்கிவிட்டு கந்தளாய் பகுதிக்கு சென்றதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது

அவர்கள் அங்கிருந்து பேரூந்து ஒன்றில் குருநாகல் (Kurunegala) வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரின் பெற்றோரும் திருகோணமலை தலைமையக காவல்நிலையத்திலும் உப்புவெளி (Uppuveli) காவல்நிலையத்திலும் முறைப்பாடு செய்தும் இதுவரையில் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments