திருகோணமலையில் கடலுக்குள் உள்ளவாங்கப்படும் குடியிருப்புகள் – அச்சத்தில் மக்கள்!

You are currently viewing திருகோணமலையில் கடலுக்குள் உள்ளவாங்கப்படும் குடியிருப்புகள் – அச்சத்தில் மக்கள்!

திருகோணமலை – வீரநகர் கரையோரப் பகுதியில் உள்ள மக்களின் குடியிருப்புப் பகுதி திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக கடலரிப்பின் காரணமாக அப்பகுதி கடலுக்குள் உள்வாங்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறான காட்சியை தம் வாழ்வில் முதல் முறை காண்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கடலரிப்பினால் கடற்கரையை அண்டி காணப்படும் சில வீடுகளின் மதில்கள், அத்திவாரம், சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.

இக்கடற்பகுதியில் பாரிய இரும்புப் பின்னல் தொகுதியொன்று கரையின் நீளமான பகுதிக்கு வெளிவருவதாகவும் இது என்ன என்பது தொடர்பில் அறிய முடியாதுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடலரிப்பில் இருந்து தம்மை பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.திருகோணமலை – வீரநகர் கரையோரப் பகுதியில் உள்ள மக்களின் குடியிருப்புப் பகுதி திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக கடலரிப்பின் காரணமாக அப்பகுதி கடலுக்குள் உள்வாங்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறான காட்சியை தம் வாழ்வில் முதல் முறை காண்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கடலரிப்பினால் கடற்கரையை அண்டி காணப்படும் சில வீடுகளின் மதில்கள், அத்திவாரம், சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.

இக்கடற்பகுதியில் பாரிய இரும்புப் பின்னல் தொகுதியொன்று கரையின் நீளமான பகுதிக்கு வெளிவருவதாகவும் இது என்ன என்பது தொடர்பில் அறிய முடியாதுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடலரிப்பில் இருந்து தம்மை பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply