திருகோணமலை, அக்போபுர, படுகச்சிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது.
அக்போபுர, படுகச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த வயோதிபப் பெண் தனது வீட்டில் தனிமையாக வாழ்ந்து வந்துள்ளதாக சிறீலங்கா காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலமானது பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.