திருகோணமலையில் பிக்குகள் தலைமையில் வந்த குழு தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயம்!

You are currently viewing திருகோணமலையில் பிக்குகள் தலைமையில் வந்த குழு தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயம்!

திருகோணமலை அரிசி மலையில் முஸ்லீம் ஒருவரது காணியை அடாத்தாக ஆக்கிரமித்து கையகப் படுத்துவதற்கு பிக்குகள் தலைமையிலான சிங்களப் பெரும்பான்மை அடாவடிக் குழு (23.09.2023) சனிக்கிழமை எடுத்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் குறித்த அடாவடிக் குழுவுக்கு தலைமை  தாங்கி வந்த
பிக்குவின் உடன் பிறந்த சகோதரர் எனத் தெருவிக்கப்படும் சம்பத் என்பவரால் கொட்டனால் தாக்கப்பட்டதில்

பெண் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் புல்மோட்டை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இன்று காலை குறித்த பிக்கு தலைமையில் வந்த குழு புல்டோசர் கொண்டு குறித்த காணியைத் துப்பரவு செய்து வரம்பு அமைக்கும் நடவடிக்கையில் ஈடு பட்டிருந்த போது

அதனை எதிர்த்து தடுத்த மக்களுக்கும் பிக்கு தலைமையில் வந்த குழுவுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்ட நிலையிலேயே குறித்த பெண் மீது தாக்குதல் நடாத்தப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதேவேளை குறித்த பிக்கு தனது  சகோதரரும் தாக்குதல் நடத்தியவருமான சம்பத்திற்கே இந்தக் காணியை விவசாய  நடவடிக்கைகளுக்காக அத்து மீறிப் பிடிக்க முனைந்துள்ளார் என மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply