திருகோணமலை(Trincomalee) தனியார் வைத்தியசாலை ஒன்றில் பெண்ணொருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் இன்று(05.11.2024) காலை இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய குறித்த பெண், தனது கணவருக்கு சொந்தமான வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த நிலையியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, உயிரிழந்த 63 வயதுடைய பெண்ணின் கணவரது சகோதரரே இந்த கொலையை செய்துள்ளதாக சிறீலங்கா காவல்துறையினரின் விசாரணைகளில் தெரிவியவந்துள்ளது.
இந்நிலையில், 55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட நாட்டுத்துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் திங்கட்கிழமை (4) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்….
4ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவரது மருமகன் நாட்டுத்துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைசேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் சிறீலங்கா பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.