அம்பாறை -திருக்கோவில் விநாயகபுரத்தில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையமொன்றை விசேட அதிரடிப் படையினர் முற்றுகையிட்டு மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
திருக்கோவில் விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அந்தப் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும், இரும்புக் குழாய்கள் மூன்றும், இரும்பு வெட்டும் இயந்திரம் ஒன்றும், ஒட்டி உருக்கும் இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று திருக்கோவில் விசேட அதிரடிப் படை முகாம் பொறுப்பதிகாரி வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34, 42 மற்றும் 54 வயதுக்குட்பட்ட திருக்கோவில் மற்றும் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் திருக்கோவில் சிறீலங்கா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.