காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் 800 பேர் வரை தங்க வைக்கப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் 75 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதல் 100 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிணைக் கைதிகள் பரிமாற்றத்தின் மூலம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில், அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காசாவில் 800 பேர் வரை தங்க வைக்கப்பட்டு இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 75 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இதன்படி இது தொடர்பாக ஐ.நா அதிகாரி தாமஸ் வைட் கருத்து தெரிவித்த போது,
இன்று மதியம் கான் யூனிஸ் பகுதியில் உள்ள ஐ.நா பயிற்சி மையத்தை இரண்டு டேங்கர்கள் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.