துனிசியாவில் புனித யாத்திரையில் திடீர் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி!

You are currently viewing துனிசியாவில் புனித யாத்திரையில் திடீர் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி!

துனிசியாவில் யூதர்களின் புனித யாத்திரையில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் உட்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துனிசியா நாட்டில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயத்தில் புனித யாத்திரை நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த யூதர்கள் கலந்துகொண்டுள்ளனர். அப்போது அவர்கள் மீது திடீர் துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காவலர்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கடற்படை காவலர் ஒருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவார் என துனிசிய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

திடீர் துப்பிக்கிச்சூட்டினால் பலர் அலறியடித்து ஓடியதில் 10 பேர் படுகாயமடைந்தனர். துனிசிய அதிகாரிகள் இந்த தாக்குதல் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

யூத யாத்ரீகர்கள் துப்பாக்கிதாரியால் குறிவைக்கப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக தெரிகிறது. உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் பிரார்த்தனையில் கூடும்போது, அவர்கள் மீது குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன.

இந்த ஜெப ஆலயம் உட்பட பல ஆண்டுகளாக எண்ணற்ற அனுபவங்களை நாங்கள் அறிவோம் என EJC தலைவர் Ariel Muzicant அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply