மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தில் தூய்மைப்படுத்தல் பணிகளை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில், 15.02.2025 அன்று மாலை மூவர் கைது செய்யப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து பெருமளவு சிறீலங்கா காவற்துறையினர் துயிலுமில்ல வளாகத்தை ஆயுதமுனையில் சுற்றிவளைத்தனர்.
அத்தோடு இராணுவமும் வரவழைக்கப்பட்டது.கைது செய்யப்பட்டவர்களிடம் துயிலுமில்ல பணிகளை மேற்கொண்டமை சார்ந்து கடுமையான விசாரணை மேற்கொண்டதோடு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்துவைக்க பாரிய முயற்சிகளை முன்னெடுத்தனர்.
மறுநாள் மன்னார் பதில்நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, ஏழு சட்டத்தரணிகள் முன்னிலையாகி கடுமையாக வாதிட்டனர்.
பின்னர், நீதவான் அனைவரையும் விடுதலை செய்தார்.
சிறிலங்காவில் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்து தொடர்விசாரணைகளை மேற்கொள்ள சிறிலங்காக் காவற்துறையும் புலனாய்வுத்துறைகளும் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்த வண்ணமே உள்ளனர்.
கைது செய்யப்பட்டு விடுதலையானவர்கள் பெயர் விபரம்.