துரித சோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் ; ICMR அதிர்ச்சி முடிவு!

  • Post author:
You are currently viewing துரித சோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் ; ICMR அதிர்ச்சி முடிவு!

துரித சோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என ICMR (Indian Council of Medical Research) கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக சீனாவைச் சேர்ந்த “Wondfo Biotech” நிறுவனம் கூறியுள்ளது.

சீனா நிறுவனங்களான “Guangzhou wondfo biotech” மற்றும் “Zhuhai livzon diagnostics” ஆகிய நிறுவனங்களிடம் சுமார் 5 லட்சம் கருவிகளை இந்திய மத்திய அரசு கொள்வனவு செய்தது. துரிதமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் வித்தியாசம் இருந்ததால், விரைவு சோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என ICMR அறிவித்தது.

பழைய முறையான PCR (Polymerase Chain Reaction) பரிசோதனையை தொடரலாம் என்றும், வாங்கிய கருவிகளை திரும்ப அளிக்க வேண்டும் என்றும் ICMR மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், ICMR இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக சீன நிறுவனமான “Wondfo Biotech” தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்த Wondfo Biotech நிறுவனம், தங்கள் கருவிகளின் தரம் சிறப்பாக இருந்ததாகவும், சூழலுக்கு ஏற்ப அதன் முடிவுகளில் மாற்றம் இருக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும், பரிசோதனை நடத்தப்பட்ட காலம் மற்றும் கருவிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெப்பநிலையில் மாற்றங்கள் இருந்தால் முடிவுகளில் மாற்றங்கள் இருக்கும் என ஏற்கெனவே தெரிவித்ததாகவும் கூறியுள்ளது.

பகிர்ந்துகொள்ள