துருக்கி பாதுகாப்பு அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளின் சிசிடிவி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. துருக்கியின் அங்காராவில் உள்ள பாதுகாப்பு தலைமை செயலகம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்த தொடங்கினர். முதலில் 3 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழப்பு 5 நெருங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் 22 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய 2 பேரை சுட்டு வீழ்த்தினர்.
துருக்கி அமைச்சர் வழங்கிய தகவலின் படி, தாக்குதல் நடத்திய ஆண் ஒருவர் மற்றும் பெண் ஒருவர் என இரண்டு பேர் நடுநிலையாக்கப்பட்டனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இவர்களை தவிர தாக்குதலில் வேறு யாரும் ஈடுபட்டார்களா என்பது தெரியவரவில்லை.
மேலும் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை, அதே சமயம் இதற்கு பின்னணியில் யார் இருப்பார் என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்நிலையில் கையில் துப்பாக்கியுடன் தாக்குதல்தாரிகள் செல்லும் பாதுகாப்பு கேமரா காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டுள்ளது.
அதில் அவர்கள் துப்பாக்கி வைத்து இருப்பதுடன் முதுகு பை ஒன்றை அணிந்து இருப்பது பார்க்க முடிகிறது.