சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜகத் ஜயசூரிய மற்றும் துரோகி கருணா ஆகியோருக்கு ஐக்கிய இராச்சியம் தடை விதிப்பு
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் கருணா ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் இன்று (24.03.) தடைகளை அறிவித்துள்ளது.
இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.
இது தொடர்பில் பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளதாவது.
பாரதூரமான மனித உரிமை மீறல்கள் துஷ்பிரயோகங்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதும்,தண்டனையின் பிடியிலிருருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்தை தடுப்பதும் இதன் நோக்கம்.
போக்குவரத்து தடைகள்,சொத்துக்களை முடக்குதல் உட்பட பல நடவடிக்கைகள் இந்த தடைகளில் அடங்கியுள்ளன.