துவிச்சக்கர வண்டி மோதி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் மரணம்!

You are currently viewing துவிச்சக்கர வண்டி மோதி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் மரணம்!

துவிச்சக்கர வண்டி மோதிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

மன்னார் – பேசாலை பகுதியைச் சேர்ந்த அன்ரனி பெனாட் லோகு (வயது – 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி வயலில் மாட்டினை மேயக் கட்டிவிட்டு வீதிக்கு ஏறினார். இதன்போது வீதியால் வந்த சைக்கிள் அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் காயமடைந்த அவர் பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, 23ஆம் திகதி அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply