தென்கொரியா ; வடகொரிய அதிபர் ‘Kim Jong-un’ இருக்கும் இடம் தெரியும்!

  • Post author:
You are currently viewing தென்கொரியா ; வடகொரிய அதிபர் ‘Kim Jong-un’ இருக்கும் இடம் தெரியும்!

வடகொரிய அதிபர் ‘Kim Jong-un’ னின் உடல்நிலை குறித்து தனக்கு தெரியும் என அமெரிக்க அதிபர் ‘Donald Trump’ தெரிவித்துள்ளார். மேலும், Kim Jong-unனின் இருப்பிடம் குறித்து தென்கொரிய அரசு அறிந்து வைத்துள்ளதாக தென்கொரிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில், Kim Jong-unனின் உடல்நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த Trump, Kim நலமுடன் இருப்பதாகவும் இதுகுறித்து விரைவில் உலகிற்குத் தெரியவரும் என்றும் கூறினார். மேலும், இதுபற்றி பேச முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

இதனிடையே தென்கொரிய நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அந்நாட்டு அமைச்சர் ஒருவர், Kim Jong-unனின் இருப்பிடம் குறித்து தென்கொரிய அரசு அறிந்து வைத்துள்ளதாக தெரிவித்தார். Kim Jong-un இறந்துவிட்டார் என தகவல்கள் உலா வந்த நிலையில், அவர் இருக்கும் இடம் தெரியும் என அமெரிக்காவும், தென்கொரியாவும் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள