தென் ஆபிரிக்காவின் Kruger தேசிய வனவிலங்குகள் சரணாலயத்தில் சிங்கங்கள் கூட்டமாக நடுவீதியில் சௌகரியமாகப் படுத்து உறங்கும் படங்கள் வெளியாகி உள்ளன.
நாடு முடக்கப்பட்டிருப்பதால் சரணாலயம் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது. சன சந்தடி இன்றி அங்கு இப்போது முழு அமைதி நிலவுவதால் பொதுவாக புதர்களில் மறைந்து கிடக்கும் சிங்கங்கள் குடும்பமாக வெளியே வீதிக்கு வந்து ஆற, அமரப் படுத்துறங்குகின்றன. முன்னர் வழமையாக வாகனங்களும் உல்லாசப் பயணிகளும் நிறைந்து காணப்படுகின்ற வீதி இது.

சரணாலயத்தில் ரோந்தில் ஈடுபட்ட காவலர் ஒருவர் வழமைக்கு மாறான இந்தக் காட்சிகளைக் கண்டு படமாக்கி யுள்ளார்.சுமார் ஐந்து மீற்றர்கள் அருகே நெருங்கிச் சென்று இதனை அவர் கைத்தொலைபேசியில் படமாக்கியபோதும் சிங்கங்கள் விழித்துக் கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று தீவிரமாக உள்ள நாடு தென்னாபிரிக்கா. சுமார் 2ஆயிரத்து 500 பேர் இங்கு வைரஸ் தொற்றுள்ளவர்களாக காணப்பட்டுள்ளனர். 35 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
படங்கள் :CNN 17-04 2020
(நன்றி குமாரதாஸன்)