தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் வேட்புமனுக்களை அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கையளித்தனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பா.உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் மற்றும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு இன்று தென் தமிழீழம் அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
அத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணி சைக்கிள் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.