தெற்கு காசாவில் தாக்குதல்: தங்க இடமில்லாமல் தவிக்கும் மக்கள்!

You are currently viewing தெற்கு காசாவில் தாக்குதல்: தங்க இடமில்லாமல் தவிக்கும் மக்கள்!

இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிணைக்கைதிகளை விடுவிக்கும் நோக்கில் இஸ்ரேல்- காசா இடையே நான்கு நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இது ஒரு சில நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லையில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கூறி இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது, நாளுக்கு நாள் தரைவழி தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக சொல்லப்படுகிறது.

வடக்கு பகுதி வாழத்தகுதியற்ற பகுதியாக காணப்படும் சூழலில், லட்சக்கணக்கான மக்கள் தெற்கு பகுதி மற்றும் முகாம்களுக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், தீவிரப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

எனவே அங்கிருப்பவர்கள் எகிப்து எல்லையை ஒட்டிய பகுதிக்கு செல்லுமாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இதனால் இருப்பதற்கு இடமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர், வடக்கு, தெற்கு என இரு பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 15 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply