தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் தொண்டுப் பணியில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஆலய தொண்டர்கள் சிலர் இணைந்து மண்டபத்தை கொம்பிறசர் மூலம், தண்ணீர் பாய்ச்சி கழுவிக் கொண்டிருந்த போது, மின் ஒழுக்கினால், குறித்த நபர் மின்சார தாக்குதலுக்குள்ளானார்.
இதையடுத்து அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போது உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மல்லாகம் துர்க்காபுரத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான சண்முகராஜ் செந்தூரன் (வயது-51) என்பவரே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.