தெஹ்ரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை!

You are currently viewing தெஹ்ரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை!

ஹமாஸ்  தலைவராக செயல்பட்டு வந்தவர் இஸ்மாயில் ஹனியே. இவர் ஈரானில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் இஸ்மாயில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்மாயிலுடன் சேர்த்து அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இஸ்மாயிலை கொலை செய்தது யார்? சம்பவம் எவ்வாறு நடைபெற்றது? என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் இஸ்மாயில் ஹனியே தலைமையிலான ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பணய கைதிகளாக காசாவிற்கு கடத்தி செல்லப்பட்டனர்.

இதையடுத்து, ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, ஹமாஸ் தலைவர்கள் உள்பட குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் கொல்லப்படுவர் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

தற்போது ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments