தேசத்தின் குரல்
ஆண்தாயின் அருகிருந்து!
அண்ணனாய் உருகிநின்று!
அரசியல்புலியாய் சீறிப்பாய்ந்து!
உரிமைப்போரை உரக்கச்சொல்லி!
வரிப்புலிகளின் கவசமாய் தாங்கிய அரசியல் சிகரமாய்!
ஒரு அரசியல் பல்கலைக் கழகமாய்!
கருக்கொள்ளும் விடியலின் ஒளியாய்!
எந்த நிலையிலூம்
உருமாற்றாத உண்மை மனிதனாய்!
வரலாற்று ஆசிரியனாய்
ஒற்றையாய் கருத்துப்போர்
தொடுப்பவராய்!
உலகத்திற்கு முன்னால்
உறுமி நிற்குற் சிறுத்தையாய்!
கட்டற்ற அறிவுக்களஞ்சியமாய்!
முட்ட வரும் பகைக்கு கேள்விக்கணையால்
சுட்டு வீழ்த்தும் அறிவுத்திறனாய்!
நட்டு நட்டு வைக்கும் நீதியின் சொற்களால் கனவின் பாதையை
செப்பனிட்டவராய்!
எதிரியின் சூட்சும முடிச்சுகளை
நகைச்சுவையால் தகர்ப்பவராய்!
புற்றுநோயின் பிடியில் சிக்குண்டபோதும்
சற்றும் தளராத அரசியல் போராளியாய்!
தம்பிக்கு நல்ல அண்ணனாய்
தாய்மண்ணிற்கு உண்மை மைந்தனாய்!
தலை சாயும் வரையும்
ஓயாது உழைத்த
தேசத்தின் குரலுக்கு
ஒருபோதும் மரணமில்லை!
நீங்கள் இல்லாத இடைவெளி
சூனியப் பிரதேசமாய்
போனாலும்
உங்களின் வரலாறே
எங்களை வழிநடத்துகிறது!
✍️தூயவன்