தேசியக்கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டி- கஜேந்திரகுமார் அறிவிப்பு
தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைத்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது புதிய கூட்டணியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் வடக்கு கிழக்கு முழுவதும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அந்தவகையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந்த வேட்பு மனுக்கள் இன்று மாலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்தததைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணி உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை நேற்று (19.03.2025) தாக்கல் செய்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது.