தேசியத்தலைவரின் படத்தை பதிவேற்றம் செய்த மூவர் அனுரா மீட்பரால் கைது!

You are currently viewing தேசியத்தலைவரின் படத்தை பதிவேற்றம் செய்த மூவர்  அனுரா மீட்பரால் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர் என சிறீலங்கா காவற்துறை ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பான LTTE அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேகநபர்கள் பேஸ்புக் சமூக வலைத்தள கணக்கின் ஊடாக பகிர்ந்துள்ளனர்.

கடந்த வருடங்களில் LTTE அமைப்பின் மாவீரர் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருடத்தின் கொண்டாட்டங்கள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறீலங்கா குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனுரா தமிழ் இனத்தின் மீட்பரென முட்டாள்த்தனமான சிந்தனைகளை விதைக்கும் அடிவருடி சிந்தனையுடையோரின் கருத்துக்களை புறந்தள்ளி தமிழராக தமிழினத்தின் விடுதலைத்தடத்தில் பயணிப்பதை தவிர எமக்கு எந்த வழியும் இல்லை என்பதையும்  சிங்கள அதிகார வர்க்கம் அடிமைப்படுத்திய வரலாற்றை மறந்தால் நாம் இறந்து போவதற்கு சமம் என்பதையும் கவர்ச்சி அரசியல் கனவான்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply