தேசிய அளவில் தங்கப் பதக்கத்தை வென்ற யாழ் பல்கலைகழக மாணவி!

You are currently viewing தேசிய அளவில் தங்கப் பதக்கத்தை வென்ற யாழ் பல்கலைகழக மாணவி!

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய சாதனையை படைத்துள்ளார்.

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் 102 ஆவது தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவியும், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பவருமான நேசராசா டக்ஸிதா, மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனையை படைத்துள்ளார்.

கோலூன்றிப் பாய்தலில் 3.72 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலமே நேசராசா தக்சிதா புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

சாதனை படைத்த மாணவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலைப் படிப்பை முடித்தாலும் எனது பயிற்சிக்கு உறுதுணையாக இருந்து, இந்த சாதனையை நிலைநாட்ட உறுதுணையாக இருந்த பாசாலை அதிபர், பழைய மாணவர் சங்கம், பாடசாலை சமூகம் மற்றும் எனது பெற்றோருக்கும் நன்றி.

மேலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அளவில் சாதனையை நிலைநாட்டுவதே எனது இலட்சியம்’ என அவர் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments