உயிரிலும் மேலாக எமது தாய் நாட்டை சுதந்திர விடுதலையை நேசித்து தமிழ் மக்களை பிடித்திருக்கும் அடிமை விலங்கை உடைதெரிய வேண்டும் எமது மக்கள் சுதந்திரமாக , கௌரமாக , பாதுகாப்பாக வாழ வேண்டும் என்ற இலட்சிய வேட்கை கொண்டு தங்களின் சுயநல இன்பத்தை துறந்து வாழும் தலைமுறையின் எதிர்கால தலைமுறையும் அடிமை வாழ்வு வாழக்கூடாது என்பதற்காய் போர்க்களத்தில் களமாடி குருதி சிந்தி மண்ணில் விதையாக வீழ்ந்த மகத்தான மாவீரர்களை நினைவு கூரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு தேம்ஸ் ஆறு பகுதியில் பிரித்தானியத் தமிழர்கள் படகு ஒன்றில் மாவீரர்கள் நினைவு சுமந்த செய்தியை தாங்கியபடி ,தமிழீழத் தேசியக்கொடி , கார்த்திகைப்பூ ஆகிய தமிழீழத் தேசிய சின்னங்களை எடுத்தியம்பினார்கள்