தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக மாற்றியமைக்கப்பட வேண்டுமானல் பெரும்பான்மையினத்தின் ஒற்றையாட்சி கட்டமைப்பு ஒழிக்கப்பட்டு ஒரு சமஸ்டி கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் வட தமிழீழம் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழர்களின் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப்போகின்றோம் என்ற போர்வையினை போர்த்திக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி வாக்களிக்கச்செய்யும் உபாயம் கையாளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுடைய பின்னணியோடு கடந்த 15 வருடங்களாக ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொண்டு அதற்குள்ளான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக வலியுறுத்தி வருகின்ற தரப்புக்கள் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் என்கின்ற போர்வையிலே தமிழ் மக்களினுடைய தேசிய அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த போகின்றோம் என்கின்ற ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனை வேட்பாளராக நிறுத்தி மக்களை ஏமாற்றி இந்த தேர்தலில் வாக்களிப்பு செய்கின்ற உபாயத்தையும் கையாண்டு வருகின்றார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.