தேர்தல் களத்தில் தவபாலன்!

You are currently viewing தேர்தல் களத்தில் தவபாலன்!

யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவ தலைவர் தவபாலன் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் வன்னியில் இளம் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.யாழ்.பல்கலைக்கழக மாணவ தலைவராக இருந்த காலங்களில் மிகவும் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை அவர் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


எனது உயிரினும் மேலான தாயக உறவுகளே!

பேரன்புக்கும் மரியாதைக்குமுரிய புலம்பெயர் உறவுகளே!

எமது முப்பத்துமூன்று வருட வாழ்வில் இன்று நாம் புதியதொரு தளத்திற்குள் நுழைகின்றோம்.
விடுதலைப்போராட்டத்தின்பால் ஏற்படுத்தப்பட்ட ஆத்மார்த்தமான பிணைப்பு இதுநாள் வரையில் நாம் நேரடி அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க/ நேரடி அரசியலில் பங்குபற்றாதிருக்க காரணம் என்போம். மக்களது பிரச்சினைகளை விவாதிக்கின்ற அல்லது முன் கொண்டு செல்கின்ற பல இடங்களில் நாம் கலந்து கொண்டபோதும் ஒரு பொதுமகன் என்ற எல்லையைத்தாண்டி எம்மால் பல மக்கள் பிரச்சினைகளை பேசமுடியாது போய்விட்டதே மக்கள் பிரதிநிதியாக இருந்திருந்தால் இவ்விடயங்களை பேசியிருக்கமுடியுமே என்று பலநாட்கள் வருந்தியதுண்டு.
ஆனால் நேரடி அரசியலில் ஆர்வமின்மையால் என்னை நானே ஆறுதல்படுத்தியதுண்டு.
ஒரு அரசியல் இயக்கத்தின் ஆதரவாளனாக இருந்தபோதும் எமது தீவிர அரசியல் செயற்பாடுகளால் நாம் நேரடி அரசியலுக்குள் நுழைய முன்பே எம்மை அரசியல்வாதியாகவே பலர் நோக்கினார்கள்.நல்லவர்களையும் வல்லவர்களையும் நேர்மையானவர்களையும் அரசியலுக்குள் கொண்டுவந்து எல்லோரும் மோசமாக உச்சரிக்கும் சாக்கடை அரசியலை தூய்மையான அரசியலாக மாற்றவேண்டும் என்ற சிந்தனையின்பால் ஒரு ஆதரவாளனாக பலரை இந்த தேர்தல் அரசியலுக்குள் அறிமுகம் செய்துள்ளோம்.நாம் நேரடி அரசியலுக்குள் நுழைய வேண்டுமென்று நீண்ட காலமாக எமது அரசியல் இயக்கத்தின் தலைமையாலும் ஆதரவாளர்களாலும் அரசியல் பேசாத பல நண்பர்களாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் அதனை நாம் தொடர்ந்து நிராகரித்தோம். நாம் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடமாட்டோம் என்கின்ற உறுதிமொழியையும் பலரிடம் வழங்கியுள்ளோம்.காலச்சூழமைவில் மாற்றம் ஒன்றேமாறாதது என்ற சிந்தனையின்பால் எமது அன்பான உறவுகளின் தொடர் கோரிக்கையை ஏற்று வன்னி மாவட்டத்தை(வவுனியா மன்னார் முல்லைத்தீவு) பிரதிநிதித்துவப்படுத்தி வரப்போகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்ற செய்தியை நாம் உயிரிலும் மேலாக நேசிக்கும் எமது சகல உறவுகளுக்கும் அறியத்தருவதுடன். வன்னி மாவட்டத்தில் இளைய தலைமுறை சார்பிலே களமிறங்கும் எமக்கான ஆதரவையும் ஆணையையும் வழங்குமாறு அன்புரிமையுடன் வேண்டுகின்றேன்.
எந்நிலைவரினும் எம்மக்களுடனான எமது பயணம் எள்ளளவும் குன்றாது.அத்துடன் இவ்வறிவிப்பை வெளியிடும்போது எம் மனதை குடைந்து கொண்டிருக்கும் அல்லது துருத்திக் கொண்டிருக்கும் ஒருவிடயத்திற்காக பொதுவெளியில் ஒரு பகிரங்க மன்னிப்பை கோரவேண்டியது அவசியமானதாகும்.மன்னிப்பு இதற்கான தீர்வாகாது போனாலும் என் இதயச்சுமையை குறைக்கும் என்நம்புகிறேன்.
நாம் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டோம் என்று தொடர்ந்து உறுதிபட வலியுறுத்தி வந்திருக்கிறோம் அதை மீறி தேர்தல் களத்தில் குதிப்பது என்பது எம் மனதில் பாரியதொரு சஞ்சலத்தையும் சுமையையும் ஏற்படுத்திக்கொண்டிருப்பதால் இந்த தவறுக்காக எம் உறவுகள் அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்புக்கோருகின்றோம்.நம்பிக்கையுடன் நீங்கள் வழங்குகின்ற ஆதரவை என்றும் தமிழ்த்தேசியத்தின்பால் கட்டிக்காப்போம் என்று சத்தியம் செய்கின்றோம்.நன்றிஎஸ்.தவபாலன்,பாராளுமன்ற வேட்பாளர்,வன்னித்தேர்தல் தொகுதி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி.(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

பகிர்ந்துகொள்ள