தேவிபுரத்தில் விதவை பெண்ணின் வீட்டு காணியினை அபகரித்த அரச உத்தியோகத்தர்கள்!

You are currently viewing தேவிபுரத்தில் விதவை பெண்ணின் வீட்டு காணியினை அபகரித்த அரச உத்தியோகத்தர்கள்!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் விக்கிவீதியில் வசித்துவந்த மோகனரூபினி என்ற இரண்டு பிள்ளைளை கொண்ட பெண்தலைமைத்தவ குடும்பத்தின் வீட்டினை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அபகரித்த வாழ்ந்துவருவதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் முறையிட்டுள்ளார்.


இது குறித்து தெரியவருகையில்..கடந்த 2005 ஆம் அண்டு விக்கி குடியிருப்பு 25 வீட்டுத்திட்டத்தில் வசித்துவந்துள்ள நிலையில் போர் காலப்பகுதியில் அரச சார்பற்ற நிறுவனத்தினால் வீட்டுத்திட்டம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.


2009 ஆம் ஆண்டு 02 ஆம் மாதம் போராளியான இவரின் கணவர் போரில் உயிரிழந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு வவுனியா இடைத்தங்கல் முகாமிற்கு சென்றுள்ள நிலையில் ஆண் உதவி இல்லாத நிலையில் தனது இரண்டு பிள்ளைகளுடன் தனது சொந்த ஊரான அம்பாறை நாவிதன் வெளியில் உள்ள தனது தாயாருடன் சென்று வாழ்ந்து வந்த நிலையில்


2012 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேற்றப்பட்டு தனது காணியினை பார்வையிட்டு பராமரித்து வந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் அரச உத்தியோகத்தில் பணிபுரியம் கணவன் மனைவி இருவரும் தனது வீட்டில் அனுமதி இன்றி வசித்து வந்துள்ளார்கள் 


ஜந்த ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள் இவர்களுக்கு கைவேலியில் நிதந்தர வீடு உள்ள போதும் ஆண்கள் உதவி இல்லாத காரணத்தினால் எங்கள் வீட்டினை அபகரித்து வசித்து வருகின்றார்கள் தனக்குரிய வீட்டு காணியில் இருந்து குறித்த அரசஉத்தியோக குடும்பங்கள் வெளியேற்றி வீட்டில் வாழ நடவடிக்கை எடுத்த தருமாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்தள்ளார்.

பகிர்ந்துகொள்ள