தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமெனக்கோரி காணி உரிமையாளர்களை ஒருங்கிணைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலானோர் கடந்த வருடம் (2023) மே 03 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு கட்டமாக போராடி வருகிறார்கள்.
போராட்டக்காரர்களை அச்சுறுத்தி மிரட்டி அடியணிய வைத்து வெளியேற்றும் முயற்சியில் சிங்கள பொலிஸ் பொறுப்பதிகாரி ஈடுபட்ட போதிலும் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக நடைபெற்றது
இந்நிலையில் ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இம்முறை 2024 யூலை மாதம் 19 ஆம் திகதி 3.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது




