தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமெனக்கோரி காணி உரிமையாளர்களை ஒருங்கிணைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இம்முறை 2025 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி நேற்று மாலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.