தையிட்டி விகாரைக்கு எதிராக இரவிரவாகப் போராட்டம்!

You are currently viewing தையிட்டி விகாரைக்கு எதிராக இரவிரவாகப் போராட்டம்!

வலிகாமம், வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நேற்று மாலை தொடங்கிய போராட்டம் இரவிரவாக இடம்பெற்றது.

நேற்றிரவு போராட்டகாரர்களை அச்சுறுத்தி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக தையிட்டி பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

மேலும் குறித்த பகுதிக்குள் உள்நுழைய முடியாதவாறு சிறிலங்கா காவற்துறையினர் வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடையேற்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட சிலர் சிறிலங்கா காவற்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து போராட்டப்பகுதியினை சுற்றி இராணுவத்தினர் முள் வேலிகளை அமைத்திருந்ததுடன், அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவு ஒன்றுகூடியதுடன், பதற்றமான சூழல் நிலவியது.

இப்போராட்டத்தில் மக்களோடு மக்களாக நின்று இரவிரவாக போராடிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் பொன் மாஸ்ரர் உட்பட இருவர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

தையிட்டி விகாரைக்கு எதிராக இரவிரவாகப் போராட்டம்! 1
பகிர்ந்துகொள்ள

Leave a Reply