தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : 24ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!

You are currently viewing தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : 24ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!

இஸ்ரேலில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் 100-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது.

இந்த போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் காசா மருத்துவமனைகளுக்கு தாக்குதலில் பலியான 132 பேரில் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போரில் ஏறத்தாழ 8000 ஹமாஸ் போராளிகள் மற்றும் 24,100 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 60,834 பேர் காயமுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போர் நிறுத்தம் தொடர்பில் இஸ்ரேலின் பொருளாதார மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர் பர்கட் கருத்து தெரிவிக்கையில்,

எங்கள் நாட்டில் அனைவரின் குறிக்கோளும் போரை வென்று, பணய கைதிகளை மீட்க வேண்டும் என்பதே ஆகும். எந்த நிபந்தனையும் இன்றி அவர்கள் சரணடைய வேண்டும்.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply