யாழ்ப்பாணத்தில் இருந்து டிப்பர் வாகனத்தில் கஞ்சா கடத்தி சென்ற நபரை சிறீலங்கா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி பூநகரி பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் சிறீலங்கா பொலிஸார் சனிக்கிழமை வழிமறித்து சோதனையிட்ட போது வாகனத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ 485 கிராம் கஞ்சா போதைப்பொருளை சிறீலங்கா பொலிஸாரால் மீட்கப்பட்டது.
அதனையடுத்து டிப்பர் வாகன சாரதியை கைது செய்யப்பட்டதோடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனம் , மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாவகச்சேரி சிறீலங்கா பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் இந்த மாணவன் தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்லும்போது சிறு கஞ்சா பொதி ஒன்றினை கொண்டு சென்றுள்ளான். இதனை அவதானித்த சக மாணவன் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளான்.
இது தொடர்பாக அந்த மாணவனை விசாரித்த பாடசாலை அதிபர், மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
அத்தோடு, மாணவனுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது? வீட்டில் கஞ்சா பாவனை இடம்பெறுகிறதா? என பல்வேறு கோணங்களில் சிறீலங்கா பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.