திருகோணமலை – குச்சவெளி பிரதேசத்தில் 50 வருடங்கள் பழமை வாய்ந்த நெல் களஞ்சியசாலை மற்றும் அதன் காணிகளையும் தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி மக்கள் இன்று (01) காலை சுலோகங்களை ஏந்தி கோசங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யுத்த மோதல்களின் போது பழைய சந்தை பிரதேசத்தில் பொலிசார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும்,
அந்த இடத்திலிருந்து பொலிசார் அகற்றப்பட்ட பின்னர், முழுக் காணியும் தொல்பொருள் பிரதேசம் என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதனை தம்மிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வீதி மறியலில் ஈடுபட்டனர்.
குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக நுழைவாயிலில் நின்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குச்சவெளி உதவிப் பிரதேச செயலாளரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றையும் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.