மியான்மரில், மீண்டும் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் அதிகாலை 2.57 மணியளவில் (இலங்கை நேரப்படி) ரிக்டர் அளவுகோலில் 3.9ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 22.51 பாகை வடக்கு அட்சரேகையிலும், 96.07 பாகை கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.இந்நிலையில் மியன்மாரில் கடந்த மாதம் 28 ஆம் திகதி 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில அதிர்வில் சிக்கி 3,145 பேர் உயிரிழந்துள்ளதுடன் 221 பேர் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
3 நாட்களுக்கு முன் இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு இந்தியப் பெருங்கடலின் உட்புறத்தில் அமைந்துள்ள தென்கிழக்கு இந்திய ரிட்ஜ் என்று அழைக்கப்படும் மலைத்தொடரில் காலை 7.13 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, இந்த அனர்த்தத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படும் எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.