சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு புரிந்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக விசாரணை வேண்டும், ICC அதற்கு சர்வதேச குமுகம் ஒத்துழைக்க வேண்டும் எனும் மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் கருத்துக்கு வலுச்சேர்க்க தொடரும் 10ம் நாள் அறவழிப் போராட்டம்.
கடந்த 2021 தை மாதம் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மதிபிற்குரிய பசுலேட் அம்மையார் அவர்கள் கூறப்பட்ட கருத்திற்கு “ தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிறிலங்கா பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரிக்க சர்வதேச குமுகம் முன் வரவேண்டும்” இக் கருத்தை இக் கூட்டத் தொடரில் நடைமுறைப் படுத்த வலுச்சேர்க்க அனைத்து தமிழ் உறவுகளும் போராட வேண்டும். இந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் போராட்டங்கள் இந்தக் கோரிக்கையில் ஒரு சேர் புள்ளியில் சந்திக்க வேண்டும். அவை எமக்கான இலக்கான “சுதந்திர தமிழீழமும் , சிறிலங்கா பேரினவாத அரசினால் மேற்கொண்ட திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையே.. ICC ஆகும்.
சர்வதேச ஊடகங்களும் முக்கிய அரசியல் மையங்களும் தமிழர்களின் நீதிக்கான போராட்டங்களில் கவனம் செலுத்தும் இவ்வேளை எந்தத் திரிபும் விட்டுக்கொடுப்பும் இன்றி நாம் போராட வேண்டும். அதன் அடிப்படையே 25வது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். இன்று 10ம் (11/09/2022) நாளாக தொடர்ந்து பிரான்சு நாட்டின் எல்லையினை மிக எழுச்சிகரமாக வந்தடைந்தது.
சவால்கள் வழி நெடுகிலும் இருப்பினும் உடல் உபாதைகள் தாங்கி விடுதலைச் செய்தியினை விட்டுக்கொடுப்பின்றி இடித்துரைக்கப்படுகின்றது இப்போராட்டம் மூலமாக. எதிர்வரும் 51வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரின் முக்கியத்துவம் அறிந்த எம் உறவுளே, உங்கள் நாடுகளில் இந்தப் போராட்டம் பயணிக்கையில் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற தவறாதீர்கள். இது காலத்தின் கட்டாயம்.
“மக்கட்புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
- தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அண்ணா.
“எமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்”
- தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்