‘தொடரை கைப்பற்றியது திருமண நாள் பரிசு’ இந்திய அணித்தலைவர் விராட் கோலி மகிழ்ச்சி!

  • Post author:
You are currently viewing ‘தொடரை கைப்பற்றியது திருமண நாள் பரிசு’ இந்திய அணித்தலைவர்  விராட் கோலி மகிழ்ச்சி!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 பந்துபரிமாற்ற தொடரை கைப்பற்றியதை தனது திருமண நாள் பரிசாக கருதுகிறேன் என்று இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவித்தார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 பந்துபரிமாற்ற துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் லோகேஷ் ராகுல் (91 ஓட்டங்கள்), ரோகித் சர்மா (71 ஓட்டங்கள்), விராட் கோலி (70 ஓட்டங்கள்) ஆகியோரின் சரவெடி ஜாலத்தின் உதவியுடன் இந்தியா நிர்ணயித்த 241 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 பந்துபரிமாற்றங் களில் 8 இலக்குகளுக்கு 173 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது

பகிர்ந்துகொள்ள